தமிழ்நாடு

அவசர அவசரமாக இளைஞர் உடலை எரிக்க முயன்ற ஊர் மக்கள் - சுடுகாட்டுக்கே சென்று பிடித்த போலீஸ்

தந்தி டிவி

த*கொலை செய்து கொண்ட இளைஞர் உடலை உறவினர்கள் போலீசாருக்கு தெரியாமல் எரிக்க முயன்ற நிலையில் அதைத் தடுக்க சென்ற போலீசார் முற்றுகையிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஐவதுகுடி கிராமத்தை சேர்ந்த 30 வயதான வேலுவுக்குத் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை உள்ள நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்... வலி அதிகமானதால் வீட்டில் தூக்கிட்டுத் த*கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரது உடலை உறவினர்கள் அவசர அவசரமாக அடக்கம் செய்ய ஆற்றங்கரைக்கு கொண்டு சென்றுள்ளனர்... தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் உடன் சென்ற போலீசார் உடற்கூராய்வுக்காக சடலத்தை கொண்டு செல்ல முயன்றனர்... அப்போது உறவினர்கள் உடலை தர மறுத்து மயானத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், ஊர் முக்கிய பிரமுகர்களிடம் உறவினர்களிடமும் வேலு இறப்பு தற்கொலை தான் வேறு ஏதும் காரணமில்லை என எழுதி கையொப்பம் வாங்கிய பிறகு போலீசார் அங்கிருந்து கிளம்பினர்...பிறகு வேலு உடலை உறவினர்கள் தகனம் செய்தனர்... இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது...

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு