கடலூர் மாவட்டம் வைரங்குப்பம் மற்றும் தச்சன் காலனி உள்ளிட்ட பகுதிகளில், தொண்டு நிறுவனம் சார்பில் அரிசி, பருப்பு, முக கவசங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. அப்போது, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கிராம மக்களும், முக கவசம் அணிந்தவாறு, சமூக இடைவெளியை கடைபிடித்து நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர்.