புதுக்கோட்டை மாவட்டம் கோடாலிகுடியில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சிறுவர்களின் சவாலை ஏற்று பம்பரம் சுற்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இல்ல விழாவிற்குச் சென்ற விஜயபாஸ்கரிடம், உங்களால் பம்பரம் சுற்ற முடியாது எனச் சிறுவர்கள் விளையாட்டுத்தனமாகச் சவால் விடுத்துள்ளனர். உடனடியாக பம்பரத்தைக் கையில் எடுத்த அவர், தரையில் வீசி லாவகமாகத் தனது உள்ளங்கையில் ஏந்திச் சுழற்றிக் காட்டினார்.