தமிழ்நாடு

பிரபல நடிகர், நடிகைகளை போலவே அச்சு அசலாக மேக் அப் அலங்காரம் செய்து கொள்ளும் பெண்

ஒவ்வொரு படத்திலும் வரும் கதாபாத்திரங்களை போலவே தன்னை அலங்கரித்து கொள்வதில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார் சேலத்தை சேர்ந்த பெண் ஒப்பனை கலைஞர் தீக்சிதா.. அவரைப் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

தந்தி டிவி

என்னை அறிந்தால் படத்தில் வரும் த்ரிஷா, நானும் ரவுடி தான் படத்தில் வரும் நயன்தாரா, பாஜிராவ் மஸ்தானி படத்தில் வரும் தீபிகா படுகோனே உள்ளிட்ட நடிகைகளை போலவே உடை மற்றும் அலங்காரம் செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவது தான் தீக்சிதாவின் விருப்பம்...

சேலத்தை சேர்ந்த தீக்சிதா, ஒப்பனை கலையின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக லண்டன் சென்று அதனை முறைப்படி கற்றுக் கொண்டார். தான் கற்றுக் கொண்ட கலையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகிறார் தீக்சிதா. பிரபல நடிகைகளை போலவே அலங்காரம் செய்து கொள்ளும் எண்ணம் தனக்கு எப்படி வந்தது என விவரிக்கிறார் தீக்சிதா..

"இப்போது நிறைய பேர் வரவேற்பு தெரிவிக்கிறார்கள்"

நடிகைகள் அணிந்து கொள்ளும் நகைகள், உடைகளை எல்லாம் பிரபல டிசைனர்கள் தான் வடிவமைப்பார்கள். ஆனால் தன் தொழில் மீது கொண்ட விருப்பம் காரணமாக அதே மாதிரியான நகைகளையும், உடைகளையும் தானே தத்ரூபமாக வடிவமைத்து அதை அணிந்து கொள்கிறார் இவர்... தான் இதுவரை செய்த அலங்காரத்தில் நயன்தாராவின் தோற்றம் பிடித்தமானது என்கிறார் தீக்சிதா...

ஒப்பனை கலை என்பது பெரிய சவாலான காரியம் தான் என்பதை நிரூபித்துக் காட்டும் விதமாக புதுப்புது முயற்சிகளை தேர்வு செய்வதும் இவருக்கு பிடித்தமானதாக இருக்கிறது.

சர்கார் படத்தில் வரும் விஜயின் தோற்றத்தை அச்சு அசலாக பெண் தோற்றத்தில் இவர் செய்திருப்பதற்கு பல தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிகிறது... தான் கற்றதை மற்றவர்களுக்கு சொல்லித் தரவும் தயாராகவே இருக்கிறார் தீக்சிதா...

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு