என்.எல்.சி. சுரங்கத்தில் "மாஸ்டர்" திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பிற்கு எப்படி அனுமதிக்கலாம், என கூறி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், விஜய் ரசிகர்களுடன் சேர்ந்து பாஜகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், படப்பிடிப்பு முடிந்து விஜய் வெளியே வந்த போது ரசிகர்கள் ஆரவாரத்துடன், நுழைவு வாயிலை நோக்கி சென்றதால் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.