தமிழ்நாடு

தமிழகத்தையே அதிரவிட்ட விக்னேஷ்-க்கு.. அதிரடி உத்தரவிட்ட நீதிபதி

தந்தி டிவி

அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிகிச்சை மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவராக உள்ள பாலாஜியை அவரது அறையில் விக்னேஷ் என்பவ​ர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், விக்னேஷ் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், தினமும் வேலூர் சத்தூவாச்சாரி காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என விக்னேஷ்க்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு