ராமநாதபுரம் மாவட்டம் புழுதிக்குளம் ஊராட்சியை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ராஜலட்சுமி, அம்மா இருசக்கர வாகனம் திட்டத்தின் கீழ் வாகனம் பெற
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முதுநிலை உதவியாளர் மாரிமுத்தை அணுகியுள்ளார். அப்போது அவர் விண்ணப்பத்தை கொடுக்க 300 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அவர் லஞ்சம் பெறும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.