தமிழ்நாடு

ஊசி மணி, பாசிகள் விற்ற பணத்தில் பட்டதாரி-ஆன நரிக்குறவர் இளைஞர்

தந்தி டிவி

ஊசி மணி, பாசிகள் விற்ற பணத்தில் பட்டதாரி-ஆன நரிக்குறவர் இளைஞர் - அரசுக்கு வைத்த மிக முக்கிய கோரிக்கை

வேலூரில், நரிக்குறவரினத்தைச் சேர்ந்த இளைஞர் மாவட்ட அளவில் முதல் பட்டதாரியான நிலையில், தனக்கு அரசு வேலை வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.வேலூர் மாவட்டம், பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. நரிக்குறவரினத்தைச் சேர்ந்த இவர், 12-ஆம் வகுப்பு தேர்வில் 450 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தார். எனினும், கல்லூரியில் சேர போதிய நிதி வசதி இல்லாத காரணத்தினால், தன் சொந்த முயற்சியில் ஊசி மணி, பாசிகள் விற்பனை செய்து அதில் கிடைக்கப்பெற்ற வருமானத்தில் தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார். குறிப்பாக, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான இவர், தன்னைப் போல மற்ற மாணவர்களும் படிக்க வேண்டுமென்ற வகையில் அவர்களுக்கு, பாடம் கற்பித்து வருகிறார். இந்நிலையில், தனக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ள ஏழுமலை, தான் அரசு பணிக்கு சென்றால் மேலும் பலர் படித்து முன்னேற உதவியாக இருக்குமென தெரிவித்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி