தமிழ்நாடு

சாக்பீஸ் துண்டுகளில் 500க்கும் மேற்பட்ட உருவங்கள் - சாதனை படைக்கும் பள்ளி அலுவலக உதவியாளர்

பள்ளியில் வேலை பார்க்கும் அலுவலக உதவியாளர் ஒருவர் சாக்பீஸ் துண்டுகளை பயன்படுத்தி பல வித உருவங்களை செய்து அசத்தி வருகிறார்

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கோட்டை பகுதியில் இயங்கிவரும் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில், இலியாஸ் என்பவர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். ஓய்வு நேரங்களை வீணாக்க விரும்பாத இலியாஸ், சாக்பீஸ் துண்டுகளில், உருவங்கள் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

காந்தி உருவம், கப்பல் உருவம், ஹெலிகாப்டர் உருவம் என 500க்கும் மேற்பட்ட உருவங்களை சாக்பீஸ் துண்டுகளில் வடிவமைத்துள்ளார் இலியாஸ்.

இதனை கண்டு வியந்த பள்ளி மாணவர்கள் பலரும் இலியாஸின் நுட்பங்களை கேட்டு தெரிந்து, அதன்படி சாக்பீஸ் உருவங்கள் செய்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். தற்போது அடுத்த முயற்சியாக பள்ளியில் வீணாகும் காகிதங்கள், புத்தகங்களை வைத்து வித்தியாசமான படைப்புகள் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார் இலியாஸ்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்