தமிழ்நாடு

குடிநீர் வழங்காததைக் கண்டித்து சாலை மறியல்

வேலூர் மாவட்டம் அருங்குன்றம் கிராமத்தில் 3 மாதமாக முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் அருங்குன்றம் கிராமத்தில் 3 மாதமாக முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையாக குடிநீர் விநியோகிக்காதது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர். தகவல் அறிந்து வந்த ரத்தினகிரி போலீசார் மற்றும் ஆற்காடு வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் விநியோகம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் அளித்த உறுதியின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்