தமிழ்நாடு

கோயிலில் கொள்ளை போன 108 கிலோ ஐம்பொன் சிலை மீட்பு

வேலூரில், கோயிலில் கொள்ளை அடிக்கப்பட்ட 108 கிலோ ஐம்பொன் சிலை மீட்கப்பட்ட நிலையில், உள்ளூர் மக்கள் பிரச்சினை காரணமாகவே அது திருடப்பட்டது என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வி.டி.கே நகரில் உள்ள அம்மன் கோவிலில் கடந்த 15ஆம் தேதி, 108 கிலோ எடையுடன் கூடிய 3 அடி உயரம் கொண்ட ஐம்பொன் சிலை கொள்ளை போனது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், வி.டி.கே நகரில் தண்டவாளத்தின் அருகே சாமி சிலை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது அங்கு இருப்பது கொள்ளை போன ஐம்பொன் சிலைகள் என தெரியவந்தது. இதையடுத்து அவற்றை மீட்ட போலீசார், சம்பவம் தொடர்பாக நான்கு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உள்ளூர் மக்களுக்கு இடையே இருந்த பிரச்சினை காரணமாகவே சிலை திருடப்பட்டது என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்