கொரோனா பரவலை தடுக்க வேலூர் மாவட்ட நிர்வாகம் காய்கறி மற்றும் மளிகை கடை களை வாரத்தில் திங்கள் புதன் வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே திறக்க அனுமதித்துள்ளது. இந்த நிலையில் குடியாத்தம் பகுதியில் அதிகாலை முதலே பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி கடைகளின் முன் குவிந்தனர். முகக்கவசம் அணியாமல், காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்குவதற்காக கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் நடமாடி வருவதால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.