தமிழ்நாடு

வேலூர் : மகன், மகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே, குடும்ப தகராறில் மனமுடைந்த தாய் இரு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
வேகாமங்கலத்தை சேர்ந்த சங்கர் - நித்யா தம்பதியினருக்கு, திருமணமாகி 10 ஆண்டுகளான நிலையில் அஸ்வினி என்ற ஏழு வயது மகளும், தனுஷ் என்ற 4 வயது மகனும் இருந்தனர். கணவன் மனைவி இருவருக்கும் அவ்வப்போது, கருத்து வேறுபாட்டால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மீண்டும் தகராறு ஏற்பட்டதால் வீட்டில் தனியாக இருந்த நித்யா தமது மகன், மகளுக்கு விஷத்தை கொடுத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு, வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கொலையா தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்