தமிழ்நாடு

1கி கேக் வாங்கினால்1லி பெட்ரோல் இலவசம்

வேலூரில் ஒரு தனியார் பேக்கரி உரிமையாளர் தனது கடையில் ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

தந்தி டிவி

வேலூரின் முக்கிய சாலையான அண்ணா சாலையில் டிசி பேக்கரி இயங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த பேக்கிரிக்கு, வாடிக்கையாளர்கள் வருகை இல்லாததால், விற்பனை மந்தமாக நடந்து வந்துள்ளது. இதையடுத்து, கடை விற்பனையை கூட்டவும், வாடிக்கையாளர்களின் வருகையை அதிகரிக்கவும் கடை உரிமையாளர்கள் முடிவு செய்தனர். அதன் படி பேக்கரியில் ஒரு கிலோ கேக் வாங்குபவர்களுக்கு, 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதே போல் பேக்கரிக்கு வந்த இருவர் தலா ஒரு கிலோ கேக் வாங்கிகொண்டு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான கூப்பனை வாங்கி கொண்டு பொட்ரோல் நிலையத்திற்கு பொட்ரோல் நிரப்ப சென்றுள்ளனர். ஆனால் பெட்ரோல் பங்க் நிர்வாகிகள் திடீரென கூப்பன்களுக்கு பெட்ரோல் கிடையாது என கூறியுள்ளனர்.

இதனையடுத்து பேக்கரியில் ஒரு கிலோ கேக் வாங்குபவரக்ளுக்கு ஒரு லிட்டர் பொட்ரோலின் விலையை கழித்து விட்டு சலுகை விலையில் வழங்கி வருகின்றனர். இந்த திட்டத்தை சிலர் அரசியலாக பார்ப்பதாக பேக்கரியின் உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்