கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற கருப்புலீஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட உற்சவர்கள் திருத்தேரில் எழுந்தருள, சிறப்பு பூஜைகளுடன் மாட வீதிகள் வழியாகத் தேரோட்டம் தொடங்கியது.