கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார். டெல்லியில், மத்திய சுற்றுலா துறை அமைச்சர் பிரகலாத் சிங் தலைமையில், மாநில சுற்றுலாத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை நான்கரை மணி வரை நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டன. இதில், பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கலை, புராதன சின்னங்களை நன்றாக பராமரிப்பதும், கட்டமைப்பு வசதிகளும் உள்ளதே, தமிழக சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு காரணம் என்றார்.