Velankanni Special Train | வேளாங்கண்ணி பேராலய திருவிழா - பக்தர்களின் கனிவான கவனத்திற்கு.. வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழாவையொட்டி, திருவனந்தபுரம் வடக்கு – வேளாங்கண்ணி இடையே இரண்டு வாரங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 29, செப்டம்பர் 5 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்தில் இருந்தும், ஆகஸ்ட் 30, செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்தும் ரயில் புறப்படுகிறது. கேரளம் மற்றும் தென் தமிழக பக்தர்கள் பயன்பெறும் வகையில் இயக்கப்படும், இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.