தமிழ்நாடு

பர்தா அணிந்து ஏடிஎம்-ஐ உடைக்க முயற்சி : சிக்க வைத்த ஆண்கள் ஹெல்மெட் - மடக்கிப் பிடித்த ரோந்து போலீசார்

கடனை அடைக்க, பர்தா அணிந்து பெண் வேடத்தில் ஏ.டி.எம்.மை உடைக்க வந்த இளைஞர், நள்ளிரவில் ரோந்து வந்த போலீசாரிடம் சிக்கினார்.

தந்தி டிவி
போக்கிரி படத்தில் மாறுவேடத்தில் வந்து வடிவேலு மாட்டிக்கொள்ளும் காட்சியை இதே போன்றதொரு சம்பவம் சென்னையில் நடந்திருக்கிறது. வேளச்சேரி 100 அடி சாலையில், நள்ளிரவில், ஏ.டி.எம். ஒன்றின் அருகே பர்தா அணிந்த பெண் ஒருவர் தனியாக நின்றிருந்தார், ரோந்து போலீசார் வருவதை கண்ட அவர், திடீரென தலைதெறிக்க ஓடினார். சந்தேகமடைந்த போலீசார், அவரை மடக்கி பிடித்த போது, அது பெண் வேடத்தில் இருந்த ஆண் என்பது தெரியவந்தது. விசாரணையில், வெல்டிங் பட்டறை ஒன்றில் வேலை செய்யும் ராஜ்குமார் எனும் 24 வயது இளைஞர் என்பதும், கடனை அடைக்க, இரவுக் காவலாளி இல்லாத அந்த ஏ.டி.எம்மை உடைக்க வந்ததும் தெரியவந்தது. பெண் வேடத்தில் நின்ற ராஜ்குமாரை சிக்க வைத்தது, அவர் அணிந்திருந்த ஆண்கள் அணியும் ஹெல்மெட் தான் என்பது ருசிகரம்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்