தமிழ்நாடு

விவசாய பாசனத்திற்காக வீராணம் ஏரி திறப்பு

வீராணம் ஏரி பாசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது.

தந்தி டிவி

வீராணம் ஏரி பாசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது. ஏரியை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 13ஆம் தேதி பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது. கல்லணையிலிருந்து கீழணைக்கு அனுப்பப்பட்ட தண்ணீர் படிப்படியாக வீராணம் ஏரியில் தேக்கி வைக்கப்பட்டது. வீராணம் ஏரி ஏறத்தாழ முழு கொள்ளளவை எட்டி விட்ட நிலையில், தற்போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்திற்கு திறக்கப்பட்டது. அமைச்சர் சம்பத் மற்றும் கடலூர் ஆட்சியர் ஆகியோர் பூஜை போட்டு ஏரியை திறந்து வைத்த நிலையில், சுமார் 400 கனஅடி நீர் விவசாயத்திற்காக வழங்கப்பட்டு வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்