செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் பறவைகள் வருகை தொடங்கி விடும். பருவமழை சரிவர பெய்த பறவைகளின் வருகை அதிகமாக காணப்படும். இந்நிலையில், கடந்த வாரம் முதல் தொடர்ந்து பெய்த கன மழையில், வேடந்தாங்கல் ஏரி நிரம்பி உள்ளது. இதனால் பறவைகளின் வருகையும் தொடங்கி உள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, சைபீரியா, வங்கதேசம் உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் இருந்து, 26 வகையான 50 ஆயிரம் பறவைகள் ஒவ்வொரு ஆண்டும், இங்கு வந்து இனப்பெருக்கம் செய்து செல்கின்றன. இந்நிலையில் தற்போது 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட பறவைகள் வருகை தந்து, வேடந்தாங்கல் ஏரி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.