வேடசந்தூர் அருகே தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அருப்பம்பட்டியில் இருந்து தொட்டணம்பட்டி வரை குண்டும் குழியுமாக இருந்த சாலைக்கு பதிலாக புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் தார் கலவை தரமற்ற முறையில் இருப்பதாக கூறி பல முறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், தார் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.