தமிழ்நாடு

வேடசந்தூர் : கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து - 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, கண்டெய்னர் லாரி ஒன்று, நடுரோட்டில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, கண்டெய்னர் லாரி ஒன்று, நடுரோட்டில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து நூல் ஏற்றிக்கொண்டு வந்த அந்த லாரி, திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் செல்வதற்காக திரும்பியபோது, இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில், லாரியின் கண்டெய்னர் மட்டும் தனியாக கவிழ்ந்து, சாலையின் குறுக்கே கிடந்ததால், 2 மணி நேரத்திற்கும் மேலாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அந்த கண்டெய்னர், கிரேன் மூலம் சாலை ஓரத்தில் வைக்கப்பட்டு, போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்