Vasanth & Co New Branch | சென்னை திருநின்றவூரில் வசந்த் அண்ட் கோ புதிய கிளை திறப்பு சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர் பேருந்து நிறுத்தம் அருகில் வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் வசந்த் அண்ட் கோ பங்குதாரர் வினோத்குமார் முன்னிலை வகித்தார். மேலும், நகர காங்கிரஸ் தலைவர் விஸ்வநாதன், திருநின்றவூர் நகராட்சித் தலைவர் உஷாராணி ரவி, தொழிலதிபர் ஸ்ரீதர், கேவின் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் எட்வின் மற்றும் வியாபாரிகள் சங்கத் தலைவர் சாலமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிய கிளையின் திறப்பையொட்டி பிரம்மாண்ட திறப்பு விழா சலுகைகள், காம்போ சலுகைகள் மற்றும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.