தமிழ்நாடு

'வார்தா' புயலில் மாயமான மீனவர்களுக்கு 4 லட்சம் இழப்பீடு கோரி மனு: தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

வார்தா புயலில் மாயமான மீனவர்களின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
கடந்த 2016-ஆம் ஆண்டு வார்தா புயல் வீசியபோது, கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்கள் மாயமாகினர். இதையடுத்து, 9 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து 1 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது. பேரிடர் மேலாண்மை நிதியத்தில் இருந்து 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த தொகை, இதுவரை வழங்கப்படவில்லை என கூறி, பிரதீப் குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, 4 வாரங்களுக்குள் இது குறித்து பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்