நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது 33-வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில், இன்று பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கினார். அத்துடன் சிறப்பு வார்டில் இருந்த குழந்தைகளின் தாய் மார்களுக்கு பரிசுப்பைகளை வழங்கிய அவர், குழந்தைகளை தனது கைகளில் ஏந்தி, கொஞ்சி மகிழ்ந்தார்.