திருவெற்றியூர் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் குடமுழுக்கு நடைபெறும் தேதி தொடர்பாக ஏப்ரல் 9ம் தேதிக்குள் பதிலளிக்க இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமத் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில், குடமுழுக்கு நடத்த மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்கள் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், மார்ச் 27ம் தேதி நடக்க உள்ள தொல்லியல் குழு கூட்டத்தில் குடமுழுக்கு நடத்த ஒப்புதல் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குடமுழுக்கு நடத்தும் தேதி குறித்து ஏப்ரல் 9-ம் தேதிக்குள் முடிவு எடுத்து தெரிவிக்க நீதிபதி உத்தவிட்டார்.