காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற உற்சவத்தையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தருகே எழுந்தருளினார். பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க, அதிர்வேட்டுகள் வெடிக்க கோலாகலமாக கருடாழ்வார் பொறித்த கொடியை, கொடிமரத்தில் ஏற்றி பிரம்மோற்சவம் தொடங்கப்பட்டது. பின்னர் வரதராஜ பெருமாள் திருவீதியுலா நடைபெற்றது. கொடியேற்ற உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.