வேலூர் மாவட்டம் வாழைப்பந்தல் என்ற கிராமத்தில் உள்ளது வரதராஜ பெருமாள் கோவில்.. சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழைமையான இந்த திருக்கோவிலில், சுவாமி சுயம்புவா மணலில் உருவாகியுள்ளதாக உள்ளூர்வாசிகள் வியப்புடன் கூறுகிறார்கள்..
மணலால் உருவாகியுள்ள சுவாமி என்பதால், இன்று வரை பாலாபிஷேகமோ, நீராலோ அபிஷேகம் செய்யப்படுவதில்லை..
யானைக்கு விமோட்சனம் கொடுத்த சுவாமி என்ற புகழும் இந்த கஜேந்திர பெருமாளுக்கு உண்டு... கோவிலின் மற்ற சிறப்புகள் குறித்து விவரிக்கிறார் கோவிலின் பூசாரி வேங்கடகிருஷ்ணன்...