தமிழ்நாடு

வாணியம்பாடியில் பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா - 37 காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

வாணியம்பாடியில் கடந்த 21ஆம் தேதி சுகாதாரத் துறை சார்பில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் செய்தியாளர்கள் என 53 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தபட்டனர். இதில் பெண் காவல் ஆய்வாளர் ஒருவருக்கு மட்டும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வாணியம்பாடி கிராமிய காவல் நிலையம் மற்றும் பெண் காவல் ஆய்வாளர் கூடியிருந்த குடியிருப்பு பகுதிக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. மேலும் பெண் காவல் ஆய்வாளருடன் பணிபுரிந்த 37 காவலர்கள் உட்பட வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது காவல் ஆய்வாளர் குடியிருப்பு அருகே வசிக்கும் மக்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்