தமிழ்நாடு

மதுரவாயல் வீட்டுக்குள் நுழைந்தார் வனிதா விஜயகுமார்...

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவல்துறை பாதுகாப்போடு மதுரவாயல் வீட்டுக்குள் நடிகை வனிதா விஜயகுமார் சென்றார்.

தந்தி டிவி

சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா வீட்டில் அவரது மகள் வனிதா படப்பிடிப்பு நடத்தினார். அதன்பிறகு அவர் வீட்டை காலி செய்யாததால் காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்தார். இதையடுத்து வனிதா மற்றும் அவரது நண்பர்களை காவல்துறையினர் வெளியேற்றினர். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வனிதா மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், வனிதாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. இதையடுத்து இன்று வனிதா விஜயகுமார் காவல்துறை பாதுகாப்போடு வீட்டிற்குள் சென்றார். தனக்கு இந்த வீட்டில் உரிமை இருப்பதாகவும், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வனிதா விஜயகுமார் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்