தமிழ்நாடு

Vandavasi Snatching | பெண்ணை எட்டி உதைத்து பள்ளத்தில் தள்ளிய கொடூரன்..கைவரிசை காட்டி தப்பிய பயங்கரம்

பெண்ணை எட்டி உதைத்து பள்ளத்தில் தள்ளிய கொடூரன்..கைவரிசை காட்டி தப்பிய பயங்கரம்

thanthitv

பெண்ணை எட்டி உதைத்து பள்ளத்தில் தள்ளிய கொடூரன்.. கைவரிசை காட்டி மின்னல் வேகத்தில் தப்பிய பயங்கரம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை கீழே தள்ளிவிட்டு, தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபரைத் தேடும் பணியில் காவலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வல்லம் கிராமத்தைச் சேர்ந்த நாற்பது வயதான நதியா என்பவர், அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி வருகிறார். தாடி நொளம்பை கிராமத்தின் ஏரிக்கரை அருகே நதியா சென்று கொண்டிருந்தபோது, தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென நதியாவின் கழுத்தில் இருந்த மூன்றரை சவரன் தாலிச் சங்கிலியைப் பறித்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணை சாலையோரப் பள்ளத்தில் தள்ளிவிட்டு, அந்த நபர் மின்னல் வேகத்தில் தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த வடவணக்கம்பாடி காவலாளர்கள், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பெண் நகையை இழந்து கதறும் காட்சிகளும் வெளியாகியுள்ளன...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்