தமிழ்நாடு

Vandavasi | Road Accident | Bus | வந்தவாசி அருகே பள்ளத்தில் சாய்ந்த அரசு பேருந்து

வந்தவாசி அருகே பள்ளத்தில் சாய்ந்த அரசு பேருந்து

thanthitv

Vandavasi | Road Accident | Bus | வந்தவாசி அருகே பள்ளத்தில் சாய்ந்த அரசு பேருந்து #Vandavasi #BusAccident #TNPolice #ViralVideo திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் சாய்ந்து விபத்துக்குள்ளானதில், 70-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். கிளாம்பாக்கத்தில் இருந்து வந்தவாசி வழியாக போளூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்தை ஓட்டுநர் தயாளன் இயக்கிச் சென்றார். வீரம்பாக்கம் கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் குறுக்கே சென்றதால் அதன் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் சாய்ந்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்து வெளியேறினர். எனினும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Deepathoon Case| ``இன்றே..’’ - தீப வழக்கு.. வார்னிங் விட்டு உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Delimitation| India Alliance| தேசிய அரசியலில் எப்போதும் இல்லாத பரபரப்பு

Gem Veeramani Case| ஜெம் வீரமணி சொன்ன ஒரு வார்த்தை

``உண்மை கண்ணீரா? முதலை கண்ணீரா?’’ - சுப்ரீம் கோர்ட் கேட்ட ஒற்றை கேள்வி.. தீப வழக்கில் ட்விஸ்ட்

கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்த பேச்சு.. ``மீறவே இல்லை’’ என சொன்ன உதயநிதி.. நீதிபதி அதிருப்தி