தமிழ்நாடு

தாயில்லா குட்டியானைகளுக்கு தாய்ப்பாசம் ஊட்டி வளர்க்கும் பூங்கா ஊழியர்கள்

தாயில்லா குட்டி யானைகளை தாய்ப் பாசத்துடன் பராமரித்து வருகின்றனர் சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்கா ஊழியர்கள்

தந்தி டிவி

குழந்தை பருவத்தில் மிகப்பெரிய இழப்பு தாயின் மரணம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் தான் அதிலும் யானைகள் தங்கள் கூட்டத்தில் தாயை விட்டு பிரியாமல் வாழும் ஒரு விலங்கினம். அவ்வாறு தாய் யானை இறந்து விட்டால் பாசத்திற்காக தவிக்கும் குட்டியானது தனித்து விடப்படுகிறது. அந்த தாயில்லா குட்டியானைகளை வனத்துறையினர் மீட்டு, வண்டலூர் உயிரியல் பூங்காவில் வளர்த்து பராமரிப்பதற்கு அனுப்பி வருகின்றனர். அவ்வாறு முதுமலை காட்டில், தாய் யானை இறந்த பின்பு 2 மாத குட்டியாக வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வந்தது தான் பிரகதி என்ற பெண் குட்டி யானை. தற்போது இந்த பிரகதிக்கு வயது 4. குட்டியாக வந்ததில் இருந்தே, பூங்கா யானைப்பாகன் பொன்னுசாமி மற்றும் அவரது மனைவி லட்சுமியின் பராமரிப்பில் தான் இருக்கிறது, பிரகதி. சொந்த குழந்தையை போல பிரகதியை வளர்த்து வருகிறார் லட்சுமி. அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டு அவரை விட்டு பிரியாமல் வலம் வருகிறது பிரகதி. தினமும் காலையில் எழுந்து விடும் பிரகதி தன் வளர்ப்பு தாயின் கொஞ்சு மொழியில் மயங்குகிறது. லட்சுமியின் கையை பிடித்து கொண்டு நடைபயிற்சி செய்யும் பிரகதி, அங்குள்ள தொட்டியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்கிறது. அதன் பின்னர் பூங்காவில் இருக்கும் மற்றொரு குட்டியானையான ரோகினியுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு, கரும்பை தன் காலால் உடைத்து திண்கிறது பிரகதி. 4 வயதில் கொண்டு வரப்பட்ட குட்டியானை ரோகிணிக்கு தற்போது ஐந்தரை வயதாகிறது. குழந்தையை பராமரிப்பது போல், வளர்த்து வருவதாக கூறுகிறார் இந்த ரோகினியை பராமரித்து வரும் யானை பாகன் குட்டி.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு