தமிழ்நாடு

வள்ளியூர் : தனியாக இருந்த பெண்ணிடம் செல்போனில் கொலை மிரட்டல்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வீட்டில் தனியாக இருந்த போது செல்போனில் கொலை மிரட்டல் விடுத்ததாக, ஜெனிலா என்ற பெண் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வீட்டில் தனியாக இருந்த போது செல்போனில் கொலை மிரட்டல் விடுத்ததாக, ஜெனிலா என்ற பெண் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். துபாயில் ஆடிட்டராக பணியாற்றி வந்த ஜெனிலாவின் கணவர் பெல்டன், ஸ்டீவர்ட் ஜோன்ஸ், விஜித் ஆபிரகாம் ஆகியோருடன் சேர்ந்து தொழில் தொடங்கியுள்ளார். ஸ்டீவர்ட் ஜோன்ஸ், விஜித் ஆபிரகாம் இருவரும் பெல்டனை தொழிலில் ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெல்டன் தனியாக வந்து தொழில் தொடங்கியுள்ளார். இது தொடர்பான தொழில் பிரச்சினையில் ஜெனிலாவை, ஸ்டீவர்ட் ஜோன்ஸ், விஜித் மற்றும் அவரது நண்பர் நிர்மல்ராஜ் ஆகியோர் செல்போனில் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜெனிலா அளித்த புகாரின் பேரில் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்