தமிழ்நாடு

40 அடி நீள பிரமாண்ட ஆணுறை : ஆணுறையில் கையெழுத்திட்ட மாணவர்கள்

சென்னை ந‌ந்தனத்தில் எச்ஐவி, எய்ட்ஸ், பால்வினை நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கானா இசையுடன் கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்டது.

தந்தி டிவி

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் 40 அடி நீளமுள்ள ஆணுறையில் மாணவ, மாணவிகள் கைழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இக்கால இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கானா பாடல் மூலம் எச்.ஐ.வி , பால்வினை நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த‌ப்பட்டது. மாணவ, மாணவிகள் தாமாக முன்வந்து கானா பாடல்களை பாடி அசத்தினர்.

தயக்கம் இன்றி குடும்பத்திற்குள் ஆணுறை குறித்து பேசினால் மட்டுமே, இளைஞர்கள் தவறான பாதையில் சிக்கி கொள்ளாமல் தடுக்க முடியும் என்கிறார் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியான சாம்பிரசாத்.... காதல், வயது கோளாறு என இக்கால இளசுகளுக்கு தவறுகள் செய்ய காரணங்கள் பல உண்டு... ஆர்வக்கோளாறில் செய்யும் அந்த தவறுகள் ஆபத்தில் முடியாமல் இருக்க, இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் காலத்தின் கட்டாயமாகியுள்ளன....

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி