தமிழ்நாடு

மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் ஜனநாயகத்துக்கு ஆபத்து - வைகோ

தமிழக உரிமைகள் காக்கப்பட வேண்டுமெனில் சிதம்பரம் தொகுதி மக்கள் திருமாவளவனுக்கு வாக்களிக்க வேண்டும் என வைகோ கூறினார்.

தந்தி டிவி

தமிழக உரிமைகள் காக்கப்பட வேண்டுமெனில் சிதம்பரம் தொகுதி மக்கள் திருமாவளவனுக்கு வாக்களிக்க வேண்டும் என வைகோ கூறினார். சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவனை ஆதரித்து, சிதம்பரத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்தார். அப்போது பேசுகையில், காந்தியை இழிவு படுத்தியவர்களை கண்டிக்காதவர்தான் பிரதமர் மோடி. கஜா புயல் தாக்கி தமிழக விவசாயிகள் அகதிகளைப் போல வீதிகளிலே அலைந்தபோது மோடி வந்து பார்க்கவில்லை. விவசாயிகள் போராட்டம் நடத்திய போது அவர்களை சந்திக்க 5 நிமிடம் கூட மோடி நேரம் ஒதுக்கவில்லை என குற்றம் சாட்டினார். தமிழகத்தில் அதை தடுத்து நிறுத்த குரல் கொடுக்காத அரசுதான் எடப்பாடி அரசு. பருப்பு ஊழல், கல்வியில் ஊழல் என ஊழலில் திளைக்கும் தமிழக அரசு, தமிழர்களின் உரிமைகள் காவு கொடுத்து விட்டது என்றும் குறிப்பிட்டார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு