நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயில் வைகாசி விசாகம் - புனித நீராடி பக்தர்கள் சிறப்பு தரிசனம் #nellai #festival #VaikasiVisakam #murugantemple #thanthitv வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு, நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கோவிலில் பக்தர்கள் திரளாக குவிந்துள்ளனர். விழாவையொட்டி மூலவர் முருகப் பெருமானுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தாமிரபரணி நதியில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற உள்ளது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் பக்தி பரவசம் நிலவி வருகிறது.