தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு ஆயிரத்து 872 கன அடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இதனால், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.