தமிழ்நாடு

பர்தா அணிந்து வந்து ஏடிஎம்-ஐ உடைக்க முயற்சி : சிக்க வைத்த ஆண்கள் ஹெல்மெட்

கடனை அடைக்க, பர்தா அணிந்து பெண் வேடத்தில் ஏ.டி.எம்.மை உடைக்க வந்த இளைஞர், நள்ளிரவில் ரோந்து வந்த போலீசாரிடம் சிக்கினார்.

தந்தி டிவி
கடனை அடைக்க, பர்தா அணிந்து பெண் வேடத்தில் ஏ.டி.எம்.மை உடைக்க வந்த இளைஞர், நள்ளிரவில் ரோந்து வந்த போலீசாரிடம் சிக்கினார். வடிவேலு காமெடியில் வரும், மண்டை மேல இருக்கும் கொண்டையை மறந்த கதை போல, சென்னை வேளச்சேரியில் நடந்த கொள்ளை முயற்சி பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு... வேளச்சேரி 100 அடி சாலையில், நள்ளிரவில், ஏ.டி.எம். ஒன்றின் அருகே பர்தா அணிந்த பெண் ஒருவர் தனியாக நின்றிருந்தார், ரோந்து போலீசார் வருவதை கண்ட அவர், திடீரென தலைதெறிக்க ஓடினார். சந்தேகமடைந்த போலீசார், அவரை மடக்கி பிடித்த போது, அது பெண் வேடத்தில் இருந்த ஆண் என்பது தெரியவந்தது. விசாரணையில், வெல்டிங் பட்டறை ஒன்றில் வேலை செய்யும் ராஜ்குமார் எனும் 24 வயது இளைஞர் என்பதும், கடனை அடைக்க, இரவுக் காவலாளி இல்லாத அந்த ஏ.டி.எம்மை உடைக்க வந்ததும் தெரியவந்தது. பெண் வேடத்தில் நின்ற ராஜ்குமாரை சிக்க வைத்தது, அவர் அணிந்திருந்த ஆண்கள் அணியும் ஹெல்மெட் தான் என்பது ருசிகரம்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்