சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி கொலு வருகிற 3ஆம் தேதி முதல் தொடங்குகிறது. சக்தி கொலுவை பார்க்க, காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும் மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். கொலுவில் உற்சவர் அம்மனுக்கு அந்தந்த நாளுக்கு உரிய சிறப்பு அலங்காரம் செய்து, வழிபாடு நடத்த கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. வருகிற 12ஆம் தேதி வரை பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.