தமிழ்நாடு

போக்குவரத்து பணிமனையில் விபத்து : உயிரிழந்தவர்களுக்கு ஓட்டுனர்கள் அஞ்சலி

வடபழனி பேருந்து நிலையத்திற்கு நேற்றிரவு வந்த பேருந்து ஒன்று திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சுவர் மீது மோதியது.

தந்தி டிவி

வடபழனி பேருந்து நிலையத்திற்கு நேற்றிரவு வந்த பேருந்து ஒன்று திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சுவர் மீது மோதியது. அப்போது சுவர் அருகே நின்று கொண்டிருந்த, சேகர், பாரதி ஆகிய 2 ஊழியர்கள், உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த, தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே இன்று காலை, வடபழனி பணிமனையில், உயிரிழந்த ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

விபத்தில் இறந்த பாரதிக்கு இந்த மாதம் 6ம் தேதி தான் திருமணமானது திருமணமான 22 நாட்களிலேயே பாரதி உயிர் இழந்தது ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், காயமடைந்தவர்களுக்கு உயர்சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், ஓட்டுனர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்