தமிழ்நாடு

வடபழனி தீ விபத்து வழக்கு : மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு

2017ஆம் ஆண்டு வடபழனியில் தீ விபத்துக்குள்ளான கட்டடம் இடிக்கப்படாதது ஏன்? என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
சென்னை வடபழனி தெற்கு பெருமாள் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்தாண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சம்பத் அடங்கிய அமர்வு, தீ விபத்துக்குள்ளான கட்டடத்தை இடிக்காதது ஏன்? சட்டவிரோத கட்டிடம் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? விபத்தில் பலியான நான்கு பேரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா? என கேள்விகளை அடுக்கியது. மேலும், இந்த விபத்து தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி