தமிழ்நாடு

வற்புறுத்திய நர்ஸ்.. 10ம் மாச தடுப்பூசி போட்ட சில மணித்துளிகளில் குழந்தை மரணம்?

தந்தி டிவி

வற்புறுத்திய நர்ஸ்.. 10ம் மாச தடுப்பூசி போட்ட சில மணித்துளிகளில் குழந்தை மரணம்? - தாயின் தோளிலே பிரிந்த உயிர்.. சோகத்தில் ஏங்கி ஏங்கி பேசிய தாய்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், பிறந்து 10 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசியால் உடல்நலம் குன்றி உயிரிழந்தததாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முழுப் பின்னணியையும் விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த எம்ஜிஆர் நகரில் வசித்து வரும் மணிகண்டன் - கலைச்செல்வி தம்பதிக்குதான் இந்த பெருந்துயரம்..பிறந்த 10 மாதங்களே ஆன தங்களின் இளைய மகனை இருவரும் பறிகொடுத்து விட்டு தவிக்கும் சோகத்தின் பின்னணி கோத்தகிரியை கதிகலங்க செய்திருக்கிறது...

குடுமனையில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், குழந்தையின் பத்தாவது மாதத்திற்கான தடுப்பூசியை செலுத்தியதில் குழந்தையின் உயிர் பறிபோனதாக கூறப்படும் பகீர் குற்றச்சாட்டே இந்த அதிர்ச்சிக்கு காரணம்..

கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்ட குழந்தை, இதயத்துடிப்பை சீர்குலைந்து மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

குழந்தையின் உடல்.. பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கும் நிலையில், தடுப்பூசி போட்டதன் எதிரொலியாய்தான் குழந்தை உயிரிழந்ததா? என சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் நீலகிரி மாவட்டத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை