தமிழ்நாடு

எமர்ஜென்சி வார்டுக்குள் காரில் சென்ற போலீசார்.. வெளியான அதிர வைக்கும் காரணம்

தந்தி டிவி

உத்தரகாண்ட் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய சதீஷ்குமார் என்பவர் பெண் மருத்துவரை பாலியல் சீண்டல் செய்ததாகவும், ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சதீஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மருத்துவமனையில் போராட்டம் நடைபெற்றது. இந்த சூழலில் சதீஷ்குமாரை கைது செய்ய மருத்துவமனைக்கு சென்ற போலீசார், காரை அவசர வார்டுக்குள்ளேயே ஓட்டிச் சென்றிருக்கிறார்கள்.. இருபுறமும் நோயாளிகள் படுத்திருக்க கார் உள்ளே செல்வதற்காக வழியையும் ஒதுக்கியிருக்கிறார்கள். நோயாளிகள் இருக்கும் ஸ்ட்ரெச்சர் மற்றும் கட்டில்கள் என்றும் பாராமல் அவைகளை தள்ளிவிட்டு போலீசார் வழியை ஏற்படுத்தும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்