தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிக்கு உதவிய அமைச்சர் உதயநிதி.. கைமாறாக பதக்கத்தை வென்று பெருமை சேர்த்த வீரர்

தந்தி டிவி

மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற மனோஜிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், தடகள போட்டியில் கலந்து கொள்ள உதவியாக, மாற்றுத்திறன் வீரர் மனோஜிற்கு ரூபாய் 2.49 லட்சத்தை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து வழங்கியிருந்தோம். பதக்கத்துடன் திரும்பி வந்த அவர், விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டில், அரசு பொதுத்துறை நிறுவனமான TNPL-ல் பணிக்குச் சேர்ந்துள்ளார். தமிழ்நாடு அரசின் நிதி உதவியை பெற்ற பின்னர், முழு ஈடுபாட்டுடன் விளையாடி பதக்கத்தை வெல்ல முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அவரது வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | Udhayanidhi Stalin | "ஷோஃபா பின்னாடியே முதல்வர்..புஷ்பா பட பாணியில் ஆட்சி நடக்குது"

ADMK EPS | ``குதிரை பேரம்.. பதவி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி..’’ - பாயிண்ட் போட்டு அடித்த ஈபிஎஸ்

EPS | CM Vijay | "ஒரு தரப்பை முதல்வர் ஆதரிப்பது சரியா?" - கொந்தளித்த EPS

Floor Test | ``நீட், பிஎம்ஸ்ரீ திட்டத்தை தவெக எதிர்க்க வேண்டும்’’ - வாக்கெடுப்பில் வைத்த டிமாண்ட்

Thamimun Ansari | விஜய் அரசுக்கு எதிர்ப்பு.. தமிமுன் அன்சாரி விமர்சனம்