மயிலாடுதுறையில் கந்து வட்டி கொடுமையால் பெண் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் வழுவூரை சேர்ந்த லட்சுமணன்-மஞ்சுளா தம்பதி, அப்பகுதியை சேர்ந்த சங்கீதா, ரேணுகா சகோதரிகளிடம், ஒரு லட்சம் ரூபாய் கடனாக பெற்றிருந்தனர். இதற்காக வட்டியுடன் 2 லட்சம் ரூபாய் செலுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில், மேலும் பணம் கேட்டு, சங்கீதா, ரேணுகா ஆகிய இருவரும் மஞ்சுளாவை அவதூறாக பேசியுள்ளனர். இதில் மனம் உடைந்த மஞ்சுளா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், கணவர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.