தமிழ்நாடு

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் அசத்திய தமிழக மாணவர்கள்

2018-ம் ஆண்டிற்கான யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வு இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாடு முழுவதும் நடைபெற்றது .மொத்தம் 782 பணிக்கு இந்த தேர்வு பல கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் அதற்கான இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி இத்தேர்வு முடிவில், மும்பை ஐ.ஐ.டி.யி.ல் பி.டெக்., பட்டம் பெற்றுள்ள கனிஷாக் கட்டாரியா என்ற இளைஞர் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.இதேபோல் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகரான போபாலை சேர்ந்த சுருஸ்தி ஜெயந்த் தேஷ்முக் என்ற பி.இ. பட்டதாரி பெண், பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து 35 மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ ஏஸ் ஆக பொறுப்பு ஏற்க உள்ளனர். தமிழக அளவில் மூன்றாம் இடம் பிடித்த குரோம்பேட்டையை சேர்ந்த மின்னனு பொறியியல் பட்டம் பெற்ற அபிஷேக், தன்னுடைய தனியார் துறை வேலை வாய்ப்பினை ராஜினாமா செய்துவிட்டு மூன்று ஆண்டுகள் கடுமையாக படித்து வெற்றி பெற்று உள்ளார்.

பள்ளியில் படிக்கும் போது இருந்தே ஐ.ஏ.ஏஸ் ஆக வேண்டும் என குறிக்கோள் வைத்து இருந்ததாகவும், ஐ.ஏ.எஸ். ஆகியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அபிஷேக் தெரிவித்துள்ளார். இதேபோல் இந்த தேர்வில் பல்லாவரத்தை சேர்ந்த தீபனா விஸ்வேஸ்வரி 117-ம் இடம் பிடித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக கடுமையாக முயற்சித்து இறுதியாக வெற்றி அடைந்துள்ளதாக கூறிய தீபனா விஸ்வேஸ்வரி மக்களுக்கு தன்னால் முடிந்த சேவையை செய்வேன் என உறுதி அளித்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி