தமிழ்நாடு

Karur Latest News| கரூரில் கண்ணால் கூட பார்க்க முடியாத பயங்கரம் - 2 டிரைவரும் கொடூர சாவு

thanthitv

லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 2 ஓட்டுநர்கள் உயிரிழப்பு கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 2 லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். குமாரமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. கொல்லுமாங்குடியில் இருந்து நெல் லோடு ஏற்றிக்கொண்டு கரூர் நோக்கி வந்த லாரியும், எம்-சாண்ட் ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கின. இதில், லாரி ஓட்டுநர்களான மேகநாதன், கோபி கிருஷ்ணன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், நீண்ட நேரம் போராடி உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், லாரிகளின் பின்னால் வந்த 2 கார்கள் மோதியதில், அவற்றின் முன்பகுதிகள் சேதமடைந்தன. விபத்து குறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#BREAKING || Nellai | பிரபல ரவுடி கோபியை சுட்டுப்பிடித்த போலீஸ் - விடிந்ததும் பரபரப்பு

TNGovt | Ration Shop | "ஆக. 2.. தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும்.." வெளியான அதிமுக்கிய தகவல்

BREAKING || சர்ச்சை பேச்சு - உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் பரிந்துரை

BREAKING || 3 பள்ளி மாணவர்கள் திடீர் மாயம் - எங்கே சென்றார்கள்? ஷாக் தகவல்

Tiruppur Subramaniam |Kollywood | ஆதரவு இல்லை.." - திருப்பூர் சுப்பிரமணியம் அறிவிப்பால் பரபரப்பு