தரவரிசைப் பட்டியல் ஜூன் இரண்டாவது வாரம் வெளியிடப்படும் என, மீன்வள பல்கலைக் கழக துணைவேந்தர் பெலிக்ஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் கீழ், நாகை, தூத்துக்குடி, பொன்னேரி ஆகிய 3 இடங்களில் மீன்வளக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு, இந்த ஆண்டு, இளநிலை மீன்வள மாலுமி கலை தொழில் நுட்பவியல், இளநிலை வணிக நிர்வாகவியல், இளநிலை ஆற்றல் மற்றும் சுற்றுச் சூழல் பொறியியல் ஆகிய மூன்று பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, பல்கலை துணைவேந்தர் நாகையில் செய்தியாளரிடம் பேசும் போது, 'மாணவர்களின் கட்- ஆப் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் ஜூன் இரண்டாவது வாரம் வெளியிடப்பட்டு, ஜூலை இரண்டாவது வாரத்தில் நேரடி கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார்.