'உங்களுடன் ஸ்டாலின்' மனுவிற்கு ரூ.20 கட்டணம் வசூல்..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே எஸ்.வி.நகரம் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுவிற்கு 20 ரூபாய் வசூலிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.வி.நகரம் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் தீர்ந்த காரணத்தில், மனுக்களை நகல் எடுத்து, அதற்கான தொகையாக பொது மக்களிடம் 20 ரூபாய் வசூல் செய்தனர்.